இத்திட்டம் எதற்கு?

  • ஒரு நபர் மற்றும் குடும்பத்திற்கு அடிப்படை அத்தியாவசியமான காப்பீட்டின் கீழ் பல ஏழை, எளிய மற்றும் நலிவுற்ற மக்கள் உட்படுத்தப்படவில்லை.
  • துரதிருஷ்டவசமாக ஏதும் விபத்து ஏற்படும் நேர்வில், ஒட்டுமொத்த குடும்பமும் நிதி ரீதியாக பாதிக்கப்படுகிறது.
  • ஏழை எளிய மற்றும் நலிவுற்ற மக்களால் பெரிய காப்பீடு கட்டணத்தொகையை (ப்ரீமியத்தை) கட்ட முடியாது / அவர்களுக்கு காப்பீடு பற்றிய விழிப்புணர்வு இருப்பதில்லை.

இத்திட்டத்தின் பலன்கள்:

  • விபத்து காரணமாக ஏற்படும் இறப்பு அல்லது ஊனத்திற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் ரூ.2 லட்சம் வரை ஓராண்டு தனிநபர் விபத்து காப்பீடு
பலன்கள் உறுதியளிக்கப்பட்ட காப்பீட்டுத்தொகை (INR)
A இறப்பு நேர்வில் 2 லட்சம்
B இரண்டு கண்களிலும் முழுமையாக பார்வை இழப்பு மற்றும் மீட்க இயலாத இழப்பு அல்லது இரு கைகளின் பயன் இழப்பு அல்லது ஒரு கண் பார்வை இழப்பு அல்லது கை அல்லது காலின் முழுமையான பயன் இழப்பு 2 லட்சம்
C ஒரு கண்ணில் முழுமையாக பார்வை இழப்பு மற்றும் மீட்க இயலாத இழப்பு அல்லது கை அல்லது காலின் முழுமையான பயன் இழப்பு 1 லட்சம்
  • செலுத்த வேண்டிய காப்பீட்டுத் தவணை தொகை ஓராண்டுக்கு ஒரு உறுப்பினருக்கு ரூ.12 ஆகும்
  • காப்பீட்டுத் தவணைத் தொகை சேமிப்புக் கணக்கிலிருந்து கழித்துக் கொள்ளப்படும்
  • தகுதி: சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்கக்கூடிய 18 முதல் 70 வரை வயதுடைய அனைவரும்.
  • இந்த காப்பீடு திட்டத்தில் (மார்ச் 2017) 9.3 கோடி ஏழை மக்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தில் எப்படி சேர்வது :

  • பங்கேற்பு வங்கிகளில் சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்கக்கூடிய 18 முதல் 70 வரை வயதுடைய அனைவரும் இத்திட்டத்தில் சேருவதற்கு உரிமைத்தகுதி உண்டு. ஒன்று அல்லது வெவ்வேறு வங்கிகளில் பல சேமிப்பு வங்கி கணக்குகள் ஒருவர் வைத்திருக்கும் நேர்வில், அவர் ஒரு சேமிப்பு வங்கி கணக்கு மூலம் மட்டுமே இத்திட்டத்தில் சேருவதற்கு அவருக்கு உரிமைத்தகுதியுண்டு.

1 லிட்டர் பால் விலை ரூ.34. ஆனால் உங்கள் 1 ஆண்டு விபத்து பாதுகாப்பு கட்டணத் தவணைத் தொகை ரூ.12 மட்டுமே.

மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in