வலுவான பொருளாதாரத்தை கட்டமைக்கவும், முன்னேற்றம் மற்றும் நிலைப்புத்தன்மைக்காக சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள இலக்குகளை எட்டவும் மற்றும் பெண்கள், ஆண்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் அனைத்து துறைகளிலும் பொருளாதார வாழ்க்கையில் பெண்கள் முழுமையாக பங்கேற்க திறனும், அதிகாரமும் பெறச் செய்வது அத்தியாவசியமாகும். மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களின் குறிக்கோளாகவும், சிறப்பு கவனம் பெற்ற திட்டமாகவும் இது இருக்கிறது.தமிழ்நாடு மாநில குடிமக்களுக்காக தொடங்கி செயல்படுத்தப்படுகின்ற பல்வேறு நலத்திட்ட நடவடிக்கைகள் வழியாக இது தெளிவாக வெளிப்படுகிறது:

  1. பிரதமரின் நிதி அதிகாரம் வழங்கல் திட்டம் – வங்கி கணக்கு (PMJDY)
  2. பிரதமரின் தனிநபர் விபத்து பாதுகாப்பு திட்டம் (PMSBY)
  3. பிரதமரின் தனிநபர் ஆயுள் பாதுகாப்பு திட்டம் (PMJJBY)
  4. பிரதமரின் சிறு & குறு தொழில் வளர்ச்சி திட்டம் (PMMY)
  5. பிரதமரின் ‘அனைவருக்கும் நகர்புற வீட்டுவசதி’ திட்டம் (PMAY)
  6. பிரதமரின் ஒளிமய திட்டம் (உஜ்வாலா யோஜனா) (PMUY)
  7. இளைஞர் சக்தி திட்டம் (KSY) (கிஷோரி ஷக்தி யோஜனா)
  8. புதிய ஞானோதய திட்டம் (நை ரோஷினி யோஜனா) (NRY)
  9. சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை (மெரிட்)
  10. அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி (தொடக்க) சர்வ ஷிக்ஷா அபியான்)
  11. அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி (இடைநிலை (ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்ஷா அபியான்)
  12. பெண் தொழில் முனைவோர்களை ஆற்றல் (அதிகாரம்) பெறச்செய்தல் (நிமிர்ந்து நில் இந்தியா)
  13. பிரதமரின் பெண் மாணவர்கள் ஆற்றல் பெற செய்தல் (UDAAN)