இளம்தலைமுறையினர், மக்கள்தொகையின் அதிக துடிப்புள்ள, உயிரோட்டமுள்ள பிரிவின் பிரதிநிதிகளாக இருக்கின்றனர். 35 வயதிற்கும் கீழ்ப்பட்டவர்கள்மொத்த மக்கள்தொகையில் ஏறக்குறைய 65% என்ற அளவில் இருப்பதால் உலகில் மிக இளமையான தேசங்களுள் ஒன்றாக இந்தியா இருக்கிறது. முதிர்ச்சியடைந்து வருகிற பணியாளர்களை கொண்டிருக்க வேண்டிய இடரை அநேக வளர்ச்சியடைந்த நாடுகள் எதிர்கொள்ள வேண்டிய நிலையில், இளவயதினர் அதிகமா இருப்பதால் இந்தியா மிக சாதகமான நிலையைகொண்டிருக்கிறது. இளந்தலைமுறையினர் முன்னேறி நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு எடுத்துச்செல்வதற்காக தமிழ்நாட்டு இளைஞர்களுக்காக பல்வேறு நலவாழ்வுத்திட்டங்களை மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு. நரேந்திரமோடி ஜி வழங்கியிருக்கிறார்:

  1. பிரதமரின் நிதி அதிகாரம் வழங்கல் திட்டம் – வங்கி கணக்கு (PMJDY)
  2. பிரதமரின் தனிநபர் விபத்து பாதுகாப்பு திட்டம் (PMSBY)
  3. பிரதமரின் தனிநபர் ஆயுள் பாதுகாப்பு திட்டம் (PMJJBY)
  4. பிரதமரின் சிறு & குறு தொழில் வளர்ச்சி திட்டம் (PMMY)
  5. பிரதமரின் டிஜிட்டல் இந்தியா முனைப்புத்திட்டம்
  6. பிரதமரின் இளைஞர் தொழில் வளர்ச்சி திட்டம் (PMKVY)
  7. பிரதமரின் புதிய தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம் (ஸ்டார்ட்அப் இந்தியா)
  8. சிறுபான்மையினர் இளைஞர் திறனளிப்பு (Nai Manzil)
  9. சிறுபான்மையினர் இளைஞர்களுக்கான கல்வி உதவித்தொகை (மெரிட் (சிறப்பான தேர்ச்சிபெற்ற) மாணவர்கள்)