இத்திட்டம் எதற்கு?

  • இந்தியாவில் காணப்படும் முக்கியமானதொரு ஆரோக்கியப் பிரச்சனையாக சிறுநீரக நோய்கள் திகழ்கின்றன
  • ஒவ்வொரு டயாலிசிஸிற்கும் தோராயமாக ரூ.2000 செலவாகிறது மற்றும் சிறுநீரக நோய்களுக்காக ஆண்டிற்கு 3 இலட்சம் செலவழிக்கப்படுகிறது.
  • ஏழை மக்களால் அத்தகைய அதிக செலவு பிடிக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ளவும் மற்றும் அதற்கான அணுகுவசதியை பெறவும் முடியாது

இத்திட்டத்தின் பலன்கள்:

  • அருகாமையிலுள்ள மாவட்ட மருத்துவமனைகளில் இலவசமான மற்றும் மிகச்சிறந்த டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்படும்
  • சுகாதாரத்துறை அமைச்சகம் தேவையான சாதனங்கள் மற்றும் சமீபத்திய உள்கட்டமைப்பினை மாவட்ட மருத்துவமனைகளுக்கு வழங்கும்
  • தமிழக மாநிலத்திற்காக 2016-17 பட்ஜெட்டில் ஏற்கனவே தனிப்பட்ட நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது

இத்திட்டத்தில் எப்படி சேர்வது? :

  • ஏழை மக்கள் (பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்கள்) இந்த இலவச சிகிச்சையை அருகாமையிலுள்ள மாவட்ட மருத்துவமனைகளில் பெறலாம்.

மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in