தங்கள் வாழ்க்கை முழுவதையும் நமது தேசத்திற்கு சேவையாற்றுவதற்காகவே அர்ப்பணித்த மகாத்மாகாந்தி, டாக்டர். அம்பேத்கர், சர்தார் வல்லபாய்பட்டேல், பண்டிட் தீன்தயாள் உபாத்தியாய் போன்ற மாபெரும் தலைவர்களும் மற்றும் இன்னும் பல இலட்சிய புருஷர்களும் வாழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க காலகட்டத்தில் அதன் ஒரு அங்கமாக இருப்பதற்கான வாய்ப்பு சுதந்திர இந்தியாவின் கடந்த 60-க்கும் அதிகமான ஆண்டுகளில் வாழும் இந்திய மக்களுள் பெரும்பான்மையோருக்கு அமையவில்லை. இத்தகைய தலைவர்கள் அனைவருமே, “சுதந்திர இந்தியா“- “வளர்ச்சியடைந்த இந்தியா’என்ற ஒரே பொது இலக்கை அடைய வேண்டுமென்ற குறிக்கோளுக்காக தன்னலமின்றி பாடுபட்டனர்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக, இந்தியா முழுவதுமுள்ள 125 கோடிக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு சிறப்பான நலவாழ்வு பலன்கள் கிடைக்கப்பெறுமாறு செய்வதில் ஒரு வெற்றிடம் இருந்து வந்திருக்கிறது. இந்த மக்கள் அனைவருமே தேசப்பற்றுடன் கூடிய தலைமை தங்களுக்கு கிடைக்காதா என ஆவலோடும்,எதிர்பார்ப்போடும் ஏங்கிக்கொண்டிருந்தனர். மே, 2014-ல் தொலைநோக்குப்பார்வையுள்ள, திறன்மிக்க தலைவரான ஸ்ரீநரேந்திரமோடிஜி அவர்களை பிரதமராக பெற இந்தியா ஆசீர்வதிக்கப்பட்டது. அவரும் “அனைவரும் ஒருங்கிணைவோம்” “அனைவரும் வளர்ச்சி காண்போம்” (“சப்கா சராத், சங்கா விகாஸ்”) என்ற தனது தொலைநோக்குத்திட்டத்தை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்.

பிரதமரின் பல்வேறு நலத்திட்ட பலன்கள் குறித்து தகவல்பெறுவதும் மற்றும் தகவலறிந்து அவற்றை முறையாக பயன்படுத்திக்கொள்வதும் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருகுடிமகனின் உரிமையாக இருக்கிறது. பாரதப்பிரதமர் அறிமுகம் செய்திருக்கிற பல்வேறு நல நடவடிக்கைகள் மற்றும் அவைகளின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்களையும், ஆதாயத்தையும் பற்றிய முழுத்தகவலை வழங்கும் நோக்கத்தோடும், அவைகளை அவர்கள் முழுமையாக அறிந்துகொண்டு அவற்றை செயல்படுத்துவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மக்களுக்கான முதன்மையானநலத்திட்டங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் தகவல், சேவை மற்றும் குறைதீர்வுக்கு பொதுமக்கள் இ-மெயில், வாட்ஸ்-அப், சமூக ஊடகம் மூலம் எங்களை தொடர்புகொள்ளலாம்.