இத்திட்டம் எதற்கு?

 • கல்விசார்ந்த உதவித்தொகைகள், சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த திறமைமிக்க மாணவர்கள், தொழில்நிபுணத்துவ மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் உயர் கல்வி பயில உதவும்.
 • இத்திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாக, கல்வி வழியாக திறனளிப்பு என்பது, சிறுபான்மையினர் சமூகங்களின், சமூக பொருளாதார நிலைகளை மேம்படுத்தும் சாத்தியத்திறனைக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் பலன்கள்:

 • சிறுபான்மையினர் சமூகங்களைச் (முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், ஜெயின்கள் மற்றும் பார்ஸிகள்) சேர்ந்த இளைய சமுதாயத்தினருக்கு இக்கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படும்.
 • மாநில அரசுகளின் வழயிhக, மத்திய அரசால், 100 சதவிகித நிதியுதவி வழங்கப்படும்.
 • பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு
 • பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், ஃபேஷன் தொழில்நுட்பம், நிர்வாகவியல், ஃபார்மா, கட்டுமானம் ரூ நகர திட்டமிடல், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், எம்சிஏ, மருத்துவம் மற்றும் மருத்துவம் சார் பயிற்சிகள், பட்டயக் கணக்காளர், கால்நடை அறிவியல் மற்றும் சட்டம் ஆகிய பாடங்கள் இத்திட்டத்தின் கீழ் உள்ளன.

இத்திட்டத்தில் எப்படி சேர்வது? :

 • இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், பார்ஸிகள் மற்றும் சமண மதத்தினர்கள் (ஜெயின்) போன்ற சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
 • அனைத்து ஆதாரங்களிலிருந்து பெற்றோர்கள் / காப்பாளர்களின் ஆண்டு வருவாய் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 • முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் 50 சதவிகிதத்திற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்
 • ஆன்லைனில் கல்வி உதவித்தொகைகளுக்காக விண்ணப்பிக்கவும் www.scholarships.gov.in (15 ஜுலை முதல் 31 அக்டோபர் வரை)
 • தேவையான ஆவணங்களில் பட்டியல் – மாணவர் புகைப்படம், கல்வி நிறுவன சரிபார்ப்பு படிவம், வருவாய் சான்று, மாணவரின் ஜாதிச்சான்று, மதிப்பெண் தாள், ‘நடப்பு பாட ஆண்டிற்கான’ கட்டணம் செலுத்திய ரசீது, குடியிருப்புச் சான்று

 

மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in