இதயத்தில் பொருத்தம் ஸ்டென்ட் விலையை 85% குறைத்திருக்கும் மோடி அரசு :

இதயம் சார்ந்த ஸ்டென்ட் என்பது என்ன?

உயிரை காக்கும் இதய சுவர் சிரை ஸ்டென்ட் : அடைத்திருக்கும் இரத்தக்குழாயை திறந்திருக்க வைக்கப்பயன்படுத்தும் சிறிய, விரிதன்மையுடைய ஒரு குழலே கரோனரி ஸ்டென்ட் என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 30,000 ஆக அதிகபட்ச விலை வரம்புக்குள் நிரணயிக்கப்பட்டிருக்கிறது. வர்த்தக ரீதியாக கிடைக்கின்ற ஸ்டென்ட்களின் விலையை விட இது 85% குறைவாகும்.

இந்த விலை வெட்டு / குறைப்பு ஏன் அவசியமாகும்?

இதயநாள நோய்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த 5 ஆண்டுகள் நாட்டில் நடைபெறுகின்ற ஆஞ்ஜியோபிளாஸ்டி (இதய அடைப்பை நீக்குவதற்கான சிகிச்சை) சிகிச்சை முறைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது.

ஸ்டென்ட்களின் விநியோகம் மற்றும் வழங்கல் செய்முறையில் ஒவ்வொரு படிநிலையிலும் இலாப வரம்பு சேர்க்கப்பட்டு விலை அதிகரிக்கிறது. நோயாளி அதை வாங்கும்போது ஸ்டென்ட்டின் மூல விலையை விட அது பன்மடங்கு அதிகரித்துவிடுகிறது.

இந்த ஸ்டென்ட்கள் மீது மிகப்பெரிய இலாபம் பார்க்கின்ற மருத்துவமனைகள் குறித்து அதிகளவில் விமர்சனங்களும் கண்டனங்களும் வைக்கப்பட்டன. சில நேர்வுகளில்ஸ்டென்ட்களில் கிடைக்கக்கூடிய இலாபமானது, 650% என்றளவுக்குக்கூடஇருந்திருக்கிறது.

விலைக்குறைப்பால் கிடைக்கும் பலன்கள் :

  • இதய பிரச்சினையுள்ள இலட்சக்கணக்கான மக்கள்,குறிப்பாக ஏழை மக்கள் இந்த விலை குறைப்பின் பலன்களினால், பெருமளவு ஆதாயமடைவார்கள்.
  • பேர் மெட்டல் ஸ்டென்ட்கள் (முந்தைய விலைகள்) – ரூ. 45,000
  • பேர் மெட்டல் ஸ்டென்ட்களின் புதிய விலை –ரூ. 7623
  • மருந்தை உமிழும் ஸ்டென்ட்கள் (முந்தைய விலை)– ரூ. 1.21 Lakhs
  • மருந்தை உமிழும் ஸ்டென்ட்களின் புதிய விலை –ரூ. 31,080
  • இதய நோயாளிகளுக்கு ஒரு ஆண்டில் ஆகக்கூடிய செலவிலிருந்து கிடைக்கப்பெறும் சேமிப்பு ரூ. 4,450 கோடியாகும்.

முழங்கால் மூட்டு பதியத்தின் விலையை 70% குறைத்திருக்கும் மோடி அரசு…