இத்திட்டம் எதற்கு?

  • இந்திய தொழிலாளர்களில் ஒரு சிறிய அளவினருக்கே ஏதும் முறையான தொழில்திறன் பயிற்சி இருக்கிறது
  • இந்தியா, உலகிலேயே மிகப்பெரிய அளவில் இளைஞர் மக்கள்தொகையைப் பெற்றுள்ளது & அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்புகள் பெறுவதற்கு தொழில்திறன் மற்றும் பயிற்சி அவசியமாகும்
  • இந்தியாவின் பொருளாதாரம் வளர வேண்டும் & ஒவ்வொரு துறையிலும் உற்பத்தித்திறன் மேம்பட வேண்டுமென்றால் தொழில்திறன் பெற்ற தொழிலாளர்கள் அவசியமாகும்
  • வயதாகிவரும் வளர்ச்சிபெற்ற நாடுகளுக்கு உலகிலேயே தொழில்திறன் கொண்ட நாடுகளுக்கு உலகிலேயே தொழில்திறன்கொண்ட தொழிலாளர்களை வழங்கும் நாடாக இந்தியா மாறவேண்டும்

இத்திட்டத்தின் பலன்கள்:

  • பெருமளவிலான இந்திய இளைஞர்களை திரட்டி, அவர்களை தொழில்திறன் பயிற்சி மேற்கொள்ளச் செய்து, வேலைக்கு உதகந்தவர்களாக மாற்றி, அவர்கள் சம்பாதித்து வாழ்க்கை நடத்தச் செய்வதற்கு இயல்வித்தல்
  • தற்போதுள்ள தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கச் செய்தல் மற்றும் நாட்டின் தேவைகளுக்கேற்ப பயிற்சி மற்றும் சான்றுறுதியளித்தலை ஒழுங்கமைவு செய்தல்
  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் தொழில்திறன் பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு, ஒரு நபருக்கு ரூ 8,000 (ரூபாய் எட்டாயிரம்) என்ற ஒரு சராசரி பண வெகுமதி வீதத்தில் வெகுமதி வழங்குதல்
  • ஏறக்குறைய ரூ 1,500 கோடி மொத்த செலவில் 24 லட்ச இளைஞர்கள் (1 ஆண்டில்) இதனால் பயனடைவார்கள்
  • இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞரும், தனது வாழ்க்கைத் தொழில் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதற்கு தொழில்திறன் பயிற்சியில் சேர்ந்து தனித்தொழில்திறன்களை வளர்த்துகொள்ளுதல் வேண்டும்

இத்திட்டத்தில் எப்படி சேர்வது? :

  • எந்த ஒரு நபரும், தேசிய தொழில்திறன் வளர்ச்சி நிறுவனத்தில் (NSDC) சேரலாம். பெயர் பதிவு செய்வதற்கு அல்லது அருகாமையிலுள்ள தொழில் வளர்ச்சி மையத்தை கண்டறிவதற்கு 088000-55555 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

 

மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in