இத்திட்டம் எதற்கு?

 • இந்தியா, சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளை (2022-ல்) நிறைவுசெய்யும்போது, ஒவ்வொரு ஏழை குடும்பமும் நீர் இணைப்பு, கழிப்பறை வசதிகள், 24×7 மின்சாரம் வழங்கல் மற்றும் அணுக்க வசதியுடன்கூடிய ஒரு பக்கா வீட்டை சொந்தமாக பெறவேண்டும்
 • நகர்புறத்தைச் சேர்ந்த பெருநகரங்களில் / நகரங்களில் வசிக்கும் குடிசைப்பகுதி மக்களுக்கு சொந்த வீடுகள் இருப்பதில்லை & அவர்களால் வீட்டுவசதி கடன்களுக்கு அதிக வட்டி கொடுக்கமுடிவதில்லை
 • குடிசைப் பகுதிகளுக்கான வீட்டுவசதி தேவையானது ஏறக்குறைய8 கோடி வீடுகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 • சொந்த வீடு என்பது, நகர்புற பகுதிகளில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படச் செய்யும்
 • ஏழை மக்கள் குடும்பச் சுமையை குறைத்தல் & அனைவருக்கும் எளிமையான வீட்டுவசதியை வழங்குதல்
 • தற்போது குடிசைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மறுவாழ்வளித்தல்

இத்திட்டத்தின் பலன்கள்:

 • ஒட்டுமொத்த நகர்புற பகுதியான 4041 நகரங்களில் 5 கோடி வீடுகள் பயன்பெறும். மூன்று கட்டங்களாக 2015 முதல் 2022 வரையில் அமல்படுத்தப்படும் இத்திட்டத்தில் வகுப்பு I-ன் கீழான 500 நகரங்களில் தொடக்கநிலையில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
 • விரைவாகவும், தரமாகவும் வீடுகள் கட்டுவதற்காக அதிநவீன, புதுமையான மற்றும் பசுமை தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்படுவதை ஏதுவாக்குவதற்காக இந்த திட்டத்தின்கீழ் ஒரு தொழில்நுட்ப துணை திட்டம் அமைத்துருவாக்கப்படும்.
 • குறைந்த வருவாய் பிரிவினர் (LIG) & நடுத்தர வருவாய் பிரிவினர் (MIG)

EWS – 3 லட்சம் வரை ஆண்டு வருமானம்

LIG – 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை ஆண்டு வருமானம்

MIG – 9 லட்சம் முதல் 18 லட்சம் வரை ஆண்டு வருமானம்

இத்திட்டத்தில் சேர்வது எப்படி? :

 • ஒரு பயனாளி என்ற சொற்றொடர், கணவன், மனைவி மற்றும் திருமணமாகாத பிள்ளைகள் அடங்கிய ஒரு குடும்பம் என பொருள்வரையறை செய்யப்படுகிறது. இந்தப் பயனாளி, இந்த திட்டத்தின்கீழ் மத்திய அரசு உதவி பெறுவதற்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலும், தன்னுடைய பெயரிலோ அல்லது தன்னுடைய குடும்ப உறுப்பினர் எவரின் பெயரிலோ ஒரு பக்கா வீட்டை சொந்தமாக வைத்திருக்கக்கூடாது.
 • இதை செயல்படுத்துவதற்கு மாநில அரசு பொறுப்பாகும். இதில் சேர்வதற்கு மாநில நகர்புற உள்ளாட்சி அமைப்பை தொடர்புகொள்ளவும்
 • 45 வீட்டுவசதி நிதியுதவி நிறுவனங்கள், 15 அட்டவணையிடப்பட்ட வங்கிகள், வட்டார ஊரக மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட 70 கடன்வழக்கு நிறுவனங்கள் வீட்டுவசதி கடன்களுக்கான இந்த திட்டத்திற்கு உதவுகின்றன.

மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in