இத்திட்டம் எதற்கு?

  • இந்தியாவில் 24 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் ஏறக்குறைய 10 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிபொருளாக LPG இன்னும் வழங்கவில்லை மற்றும் அவர்கள் விறகு நிலக்கரி, வறட்டி – முதலியன சமையலுக்கு முக்கிய ஆதாரமாகும்.
  • இதுபோன்ற எரிபொருள்களிலிருந்து வரும் புகை பயங்கர மாசுபாட்டை வீட்டுக்கு விளைவிப்பதுடன் பல சுவாச நோய்கள் / கோளாறுகளை ஏற்படுத்தி பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலத்தை மோசமாக பாதிக்கிறது.
  • தூய்மையற்ற எரிபொருளிலிருந்து பெண்களால் சுவாசிக்கப்படும் புகையானது ஒரு மணி நேரத்தில் 400 சிகரெட்டுகள் கொளுத்துவதற்கு சமமாகும்.

திட்டப்பணிகள்:

  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுத்தமான சமையல் எரிபொருள் LPG வழங்குவதன் மூலம் அவர்களின் உடல்நலனை பாதுகாத்தல் – எனவே அவர்கள் புகைசூழ்ந்து சமையல்கூடங்களில் அவர்களின் உடல்நலனை விட்டுக்கொடுத்த தேவையில்லை.
  • இந்த திட்டத்தின்கீழ், அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு இணைப்புக்கு ரூ. 1600 என்ற வகையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களுக்கு 5 கோடி எல்பிஜி இணைப்புகள் வழங்கப்படும்.
  • பெண்களை ஆற்றல் பெறச் செய்வதை உறுதிசெய்யும் வகையில், குறிப்பாக ஊரக இந்தியாவில் வீட்டு குடும்பப்பெண்களின் பெயரில் இணைப்புகள் வழங்கப்பட்டன.

இந்த திட்டத்தில் சேர்வது எப்படி?

  • BPL குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அருகாமையிலுள்ள எல்பிஜி வினியோகிப்பாளரிடம் ஒரு புதிய எல்பிஜி இணைப்பு கோரி விண்ணப்பிக்கலாம் (வகுத்துரைக்கப்பட்ட படிவத்தில்).
  • விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும்போது. விரிவான முகவரி, ஜன்தன் வங்கி கணக்கு மற்றும் குடும்பத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களால் (OMCs) இணைப்பு வழங்கப்படும்.
  • நுகர்வோர், EMI-க்கு விருப்பம் தெரிவிக்கும்பட்சத்தில், EMI தொகையானது, ஒவ்வொரு ரீஃபில்-க்கும் நுகர்வோருக்கு கொடுக்கப்படவேண்டிய மானிய உதவித்தொகை பேரில் சரிகட்டப்படும்.

 

மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in