இத்திட்டம் எதற்கு?

  • ஏறக்குறைய 6 கோடி சிறு மற்றும் குறு தொழில்களுக்கு (உற்பத்தி, பதப்படுத்துதல், வணிகம் & சேவைகள், துறைகள்) ரூ 1,00,000 கோடிக்கு உட்பட்ட நிதியுதவி தேவைப்படுகிறது
  • இந்த சிறு தொழில் முனைவோர்கள், இயல்பான வழிமுறைகள் மூலம் நிதிக்கடன்கள் கிடைக்கப்பெறுவதில் மிகவும் சிரமப்படுகின்றனர் மற்றும் இதனால் மிகவும் அதிக வட்டி வீதத்தில் சந்தையிலிருந்து பணம் பெறுகிறார்கள்.
  • இந்தியாவில் சிறுதொழில்கள் குறைந்து வருகின்றன மற்றும் இத்தொழிலில் நீடிப்பதற்கு மக்கள் பெரிதும் போராடுகிறார்கள்.

இத்திட்டத்தின் பலன்கள்:

  • ரூ 10 லட்சத்திற்குட்பட்டு கடன் தேவைப்படக்கூடிய உற்பத்தி, வணிகம் மற்றும் சேவைகள் துறை போன்ற அனைத்து விவசாயம் சாரா வருமானம் பெருக்கும் செயல்நடவடிக்கைகளும், பிரதமரின் சிறு மற்றும் குறு தொழில் வளர்ச்சி திட்டத்தின்கீழ் (PMMY) முத்ரா (MUDRA) கடன்கள் எனப்படுகின்றன
    1. சிசு : ரூ 50,000/- வரை கடன்கள்
    2. கிஷோர் : ரூ 50,000/-க்கு மேற்பட்டு ரூ 5 லட்சம் வரை
    3. தருண் : ரூ 5 லட்சத்திற்கு மேற்பட்டு ரூ 10 லட்சம் வரை
  • இந்தியா முழுவதும் 3.4 கோடி மக்களுக்கு பலனளிக்கும் வகையில், ரூ.1,32,954 கோடி கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது (மார்ச் 2017). தமிழகத்தில், 47.81 இலட்சம் மக்களுக்கு பலனளிக்கும் வகையில், ரூ.15,496 கோடி கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது
  • வங்கிகள், NBFCகள் / MFIகளுக்கு மிகவும் குறைந்த வட்டியில் மறுநிதியுதவியை முத்ரா வழங்குகிறது
  • அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்குள் திருப்பிச்செலுத்து கால கெடுவுடன் மிகவும் குறைந்த வட்டி
  • கூட்டு பிணையம் & பரிசீலனை கட்டணங்கள் இல்லாமல் எளிமையான மற்றும் நீக்குபோக்குடைய கடன் திட்டம்
  • தொழில்பிரிவின் நடப்பு மூலதன தேவைகளை நிறைவேற்றித் தருகிறது
  • ஒரு வங்கியால் நேரடியாக அல்லது MFIகளுடன் கூட்டு சேர்ந்து வழங்கப்படுகிறது
  • ‘ருபே’ டெபிட் கார்டு (பற்று அட்டை) வடிவில் வழங்கப்படுகிறது. ஏதும் ஏடிஎம்-லிருந்து ரொக்கப் பணம் எடுக்கலாம் அல்லது POS மிஷின்களை பயன்படுத்தி வணிகப்பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் எப்படி சேர்வது? :

  • சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள், தற்போது 27 பொதுத்துறை வங்கிகள், 17 தனியார்துறை வணிக வங்கிகள், 29 RRBகள் மற்றும் 47 NBFCகள் / MFIகள் உள்ளிட்ட 120 கூட்டாளிகளை அணுகலாம்.

மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in