இத்திட்டம் எதற்கு?

  • தரமான உள்நாட்டு மருந்துகளை கட்டுபடியாகக் கூடிய விலையில் அனைவருக்கும், குறிப்பாக ஏழை மற்றும் நலிவுற்ற மக்களுக்கு, ‘ஜன் ஒளஷதி மெடிக்கல் ஸ்டோர்’ வழியாக பிரத்தியேகமாக வழங்குவதன் வழியாக, ஆரோக்கிய பராமரிப்பில் அவர்களது செலவீனங்களை குறைப்பதே இதன் நோக்கமாகும்.

.

இத்திட்டத்தின் பலன்கள்:

  • மக்களுக்கு இதன் வழியாக பிராண்டட் மருந்துகளுக்கு சமமான ஆற்றல் மற்றும் பாதுகாப்பு கொண்ட உள்நாட்டு மருந்துகள் குறைவான விலையில் கிடைக்கப்பெறும்.
  • மேலும் மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே அல்லது வேறு எந்தவொரு பொருத்தமான இடத்திலும், எந்தவொரு என்ஜிஓ / அறக்கட்டளைகள் / சுய உதவிக்குழுக்கள் / தனிநபர் தொழில்முனைவோர்கள் / மருந்தகத்தினர் / மருத்துவரும் இதை துவக்கலாம்.
  • இதன் துவக்கத்திற்காக, மத்திய அரசு நிதியுதவியளிக்கும் (ரூ.2.5 இலட்சங்கள் வரை).

இத்திட்டத்தில் எப்படி சேர்வது? :

  • சொந்த இடம் அல்லது முறையான லீஸ் ஒப்பந்தம் கொண்ட வாடகை அமைவிடம்
  • BPPI அங்கீகரித்தபடி முறையான தரநிலை அளவுகளுடன் கூடிய குறைந்தபட்ச அமைவிடம். அதாவது, 120 சதுர அடிகள். முறையான அலுவலரிடமிருந்து விற்பனை உரிமம் (விண்ணப்பதாரரின் பெயரில் ரீடெயல் டிரக் உரிமம் மற்றும் / அல்லது டின் எண்)
  • கணினி அறிவு கொண்டதொரு மருந்தாளுனரைக் கொண்டிருப்பதற்கான ஆதாரம், மாநில கவுன்சிலில் பதிவு, போன்றவைகள் வழங்கப்பட வேண்டும்.

 

மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in