இத்திட்டம் எதற்கு?

  • இந்திய மக்களிடம் நம்முடைய பொருளாதாரத்திற்கு பங்களிக்கக்கூடிய பெரும் ஆற்றல், திறமை, திறன் உள்ளது.
  • பல திறமையானவர்கள் தங்கள் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் நிதியுதவி மற்றும் இதர ஒழுங்குமுறைகள் இல்லாத காரணத்தால், அவர்களால் தொழில் தொடங்கமுடியவில்லை.
  • நம் மக்கள் தொகையில் 65% பேர் இளைஞர்கள் மற்றும் அவர்கள் வேலை தேடுவதற்குப் பதில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

இத்திட்டத்தின் பலன்கள்:

  • மின்பதிவு & சுய சான்றுறுதி செய்துகொள்ளும் இணக்கத்தன்மை
  • முதல் 3 ஆண்டுகளுக்கு எந்தவித ஆய்வும் கிடையாது
  • முதல் 3 ஆண்டுகளுக்கு இலாபம் மீது வருமான வரி கிடையாது
  • ஒரே நாளில் ஸ்டார்ட்-அப் பதிவு செய்வதற்குரிய மொபைல் ஆப்
  • ஸ்டார்ட்-அப்-களை ஊக்குவிப்பதற்கு 10,000 கோடி கொண்ட அர்பணிப்பு நிதியங்கள்
  • ஒரு முனை தொடர்பு மையமாக, ஸ்டார்ட் அப் இந்தியா
  • எளிமையான வெளியேறு கொள்கை
  • பெண் விண்ணப்பதாரர்களுக்கு பிரத்யேக ஏற்பாடு

இத்திட்டத்தில் எப்படி சேர்வது? :

  • துவக்கப்பட்ட / பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து 5 ஆண்டுகள் வரை
  • ஒரு தனியார் லிமிடெட் நிறுவனமாக துவக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஒரு கூட்டாண்மை நிறுவனமாக அல்லது ஒரு லிமிடெட் லயபிளிட்டி பார்ட்னர்ஷிப்பாக பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • எந்தவொரு நிதியாண்டிற்கான விற்றுமுதலும், ரூ.25 கோடிகளை கடந்திருக்கக்கூடாது
  • தொழில்நுட்பம் அல்லது அறிவுசார் சொத்துரிமையை பின்புலமாகக் கொண்டு, புதிய தயாரிப்புகள், செயல்முறைகள் அல்லது சேவைகளின் புத்தாக்கம், மேம்பாடு, அமலாக்கம் அல்லது வர்த்தகமயமாக்கலை மேற்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்

மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in