இத்திட்டம் எதற்கு?

  • உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பெரிய அளவிலான நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்கள், எந்தவொரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனைகள் / மையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான நிதியுதவியை இத்திட்டம் அளிக்கிறது

இத்திட்டத்தின் பலன்கள்:

  • அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை உட்பட்ட தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நோயாளிகள் (வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள்) ரூ.10 லட்சம் வரையிலான நிதியுதவியைப் பெற இத்திட்டம் உதவும்.

இத்திட்டத்தில் எப்படி சேர்வது? :

  • பரிந்துரைக்கப்பட்ட வடிவில், அரசு மருத்துவமனை / மையத்தில், சிகிச்சை அளிக்கும் மருத்துவர் மற்றும் மருத்துவ மேற்பார்வையாளர் கையெழுத்துடன் விண்ணப்பம் சமர்பிக்கப்பட வேண்டும்.
  • வருவாய் சான்றிதழ் நகல்
  • குடும்ப அட்டை நகல்
  • 12 மத்திய அரசு மருத்துவமனைகள் / மையங்களில் சுழற்சி நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன மற்றும் தலா ஒவ்வொரு நேர்விற்கும் ரூ.2 இலட்சம் வரை சிகிச்சைக்காக செலவு செய்ய ரூ.50 லட்சம் வரையிலான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
  • ரூ.2 இலட்சத்திற்கு மேற்பட்ட தொகை தேவைப்படும் நேர்வுகள், கூடுதல் நிதியுதவிக்காக, மத்திய ஆரோக்கியம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறைக்கு பரிந்துரை செய்யப்படும்

மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in