இந்த திட்டம் எதற்கு?

  • அரசு நடைமுறைகள், வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களுடன் அனைத்து நிலைகளிலும் கலந்து செயல்படுவதற்குரிய அறிவு, கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்குவதன் மூலம் இதர சமுதாயங்களிலிருந்து பக்கத்தில் உள்ளவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை பெண்களிடையே ஆற்றல் பெறச்செய்து தன்னம்பிக்கையை ஏற்படுத்துதல்.
  • தலைமை பாத்திரங்களை மேற்கொண்டு, சேவைகள், வசதிகள், திறன்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு அணுக்கம் பெறுவதில் அவர்களுக்கு உரிய உரிமைகள் குறித்து அறிய வைப்பதற்கு பெண்களுக்கு உதவுதல்.

இத்திட்டத்தின் பலன்கள்:

  • சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள், அவர்களுக்கு பொருளாதார ஆற்றல் வழங்கும் திறன் சார்ந்த தலைமை வளர்ப்பு பயிற்சி பெறுவார்கள்.
  • குறிப்பாக ஊரக பெண்கள் தங்கள் வாழ்க்கை மற்றும் வாழும் நிலைமைகளை மேம்படுத்திக்கொள்வதற்கு அரசின் மேம்பாட்டு பயன்களின் உரிய பங்கினை பெறுவார்கள்.
  • முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் ஜெயின்களை சார்ந்த பெண்களும் சேர்க்கப்படுவார்கள். சிறுபான்மை சாரா சமுதாயத்தினரிலிருந்தும் 25 சதவிகிதம் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
  • பெண்களின் தலைமை, கல்வி திட்டங்கள், உடல்நலமும் சுகாதாரமும், ஸ்வச் பாரத், நிதி பற்றிய கல்வியறிவு, வாழ்க்கைத் திறன்கள், பெண்களின் சட்ட உரிமைகள், டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் சமூக மற்றும் நடத்தை மாற்றம் ஆகிய பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படும்.

இத்திட்டத்தில் சேர்வது எப்படி?

  • பெண்கள் 18 ஆண்டுகள் முதல் 65 ஆண்டுகள் வரை இடைப்பட்ட வயது பிரிவைச் சேர்ந்தவர்களாகவும், ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு உட்பட்டவர்களாகவும் இருப்பவர்கள் மேம்பாட்டு பயிற்சியில் சேர்வதற்கு தகுதியுடையவராவார்கள்.
  • பெண்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு கிராம பஞ்சாயத்து, நகராட்சி அமைப்பு, உள்ளாட்சி அமைப்பு தலைவரிடம் தங்கள் பெயர்களை விண்ணப்பிக்க வேண்டும். தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் அப்ளிகேஷன் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் மூலம் நை ரோஷினிக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • பயிற்சிகள் நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்ட என்ஜிஓக்கள் அமைச்சகத்தால் நியமிக்கப்படுவார்கள்.

மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in