முழங்கால் மூட்டு பதியத்தின் விலையை 70% குறைத்திருக்கும் மோடி அரசு :

முழங்கால் மூட்டு பதியம் என்பது என்ன?

முழங்கால் மூட்டில் பிரச்சினை இருப்பதால் நிற்க, நடக்க சிரமப்படும் நோயாளிகளுக்குஅவர்களது சேதமடைந்த முழங்கால் மூட்டை அகற்றிவிட்டு புதிய செயற்கை முழங்கால் மூட்டை மருத்துவர்கள் பொருத்துகின்றனர். இதன் அதிகபட்ச நிலையானது, ரூ. 54,720 என இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியில் தற்போது இருந்துவரும் விலையைவிட சுமார் 70%

 

விலை வெட்டு / குறைப்பு ஏன் அவசியமாகும்?

இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான நபர்கள் முழங்கால் பிரச்சினைகளினால் அவதியுறுகின்றனர். முழங்கால் மூட்டுமாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கு அதிக விலையை அவர்கள் தர வேண்டியிருக்கிறது. செயற்கை மூட்டு பதியத்தின் விநியோகம் மற்றும் வழங்கலின் ஒவ்வொரு படிநிலையிலும் விலை அதிகரிக்கப்படுவதால், நோயாளியிடம் அது வரும்போது அதன் விலை பன்மடங்காக உயர்ந்துவிடுகிறது. முழங்கால் மூட்டுமாற்றுப்பதியத்தை அதிக விலை குறித்து விற்று பெரும் இலாபம் பார்ப்பதாக மருத்துவமனைகள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்தன. சில நேரங்களில் மூல விலையைவிட 450% அதிகமாக இது விற்கப்பட்டிருக்கிறது.

விலைகுறைப்பின் ஆதாயங்கள் :

  • 3 கோடிக்கும் அதிகமான நோயாளிகள், குறிப்பாக வசதியற்ற ஏழை நோயாளிகள் விலை குறைப்பினால் பெருமளவு பயனடைவார்கள்.
  • கோபால்ட் குரோமியம் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை (முந்தைய விலை –ரூ. 1,58,324
  • விலைக்குறைப்புக்கு பின் புதிய விலை –ரூ. 54,720
  • மூட்டு மாற்று சிகிச்சை பயன்படுத்தப்பட்ட சிறப்பு உலோகங்கள் (முந்தைய விலை) –ரூ. 2.49இலட்சம்
  • விலைக்குறைப்புக்கு பின் இதன் புதிய விலை –ரூ. 76,600
  • ஒரு ஆண்டில் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்யும் நோயாளிகளுக்கு இவ்விலை குறைப்பினால் கிடைக்கக்கூடிய சேமிப்பு ரூ. 1500 கோடியாகும்.

இதயத்தில் பொருத்தம் ஸ்டென்ட் விலையை 85% குறைத்திருக்கும் மோடி அரசு…