இத்திட்டம் எதற்கு?

  • வளரிளம் பருவம் என்பது பெண்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய கட்டமாகும்.
  • இந்த கட்டம் குழந்தைபருவத்திற்கும் மற்றும் பெண்மைப்பருவத்திற்கும் இடையேயுள்ள இடைநிலைப்பருவம் ஆகும் மற்றும் இது மன உணர்வு மற்றும் உளவியல் நலனுக்கு மிகவும் கண்கூடாகும்.

இத்திட்டத்தின் பலன்கள்:

  • வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தைச் சார்ந்த மற்றும் பள்ளிக்கூடத்தை விட்டு பாதியில் நின்றுவிட்ட திருமணமாகாத வளரிளம் பருவப்பெண்கள் (11 – 18 வயது) 6 மாத கல்வி பயிலல் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்கு தேர்வு செய்யப்பட்டு அங்கன்வாடி மையங்களில் சேர்க்கப்படுதல்.
  • வளர் இளம்பருவப் பெண்களின் (11-18 வயது பிரிவினர்) ஊட்டச்சத்து மற்றும் உடல்நல நிலைகளை மேம்படுத்துதல்.
  • முறை சாரா கல்வி மூலம் தேவையான படிப்பறிவு மற்றும் எண்ணறிவு திறன்களுக்கு வகை செய்தல்.
  • வீடு சார்ந்த மற்றும் தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதற்கு வளர் இளம் பருவ பெண்களுக்கு பயிற்சியளித்து பெறச் செய்தல்.
  • உடல்நலம், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் குடும்ப நலம் குறித்த விழிப்புணர்வை ஊக்குவித்தல்.

இத்திட்டத்தில் சேர்வது எப்படி?

  • வளர் இளம் பருவ வயது பெண்கள் முறைப்படி உள்ள அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்துப் பெறலாம் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையங்கள்)

 

மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in