இத்திட்டம் எதற்கு?

  • மதிப்புமிக்க பொறியியல் கல்வி நிறுவனங்களில் குறைந்த எண்ணிக்கையில் பெண் மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி கல்விக்கும் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கும் இடையே (கற்பித்தல்) போதனை இடைவெளி.
  • பாடதிட்ட வடிவமைப்பு, பரிவர்த்தனை மற்றும் மதிப்பீடுகள் ஆகிய கல்வியின் முப்பரிமாணங்களை கவனிப்பதன் மூலம் அறிவியல் மற்றும் கணிதம் கற்பித்தல் மற்றும் கற்றலை மேம்படுத்துதல்.

இத்திட்டத்தின் பலன்கள்:

  • இந்த திட்டத்தின் கீழ், பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் படிக்கும்போது நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய பொறியியல் கல்லூரிகளில் நுழைவுத்தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்வதற்கு இலவச ஆஃப்லைன் / ஆன்லைன் ஆதாரங்கள் வார் இறுதி தொடர்பு வகுப்புகள் மற்றும் முன் – லோட் செய்யப்பட்ட டேப்லெட்டில் ஸ்டடி மெட்டீரியல்கள் மூலம் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் / ஆஃப்லைன் ஆதாரங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
  • மெச்சத்தக்க மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வகுப்புகள்

 

இத்திட்டத்தில் சேருவது எப்படி?

  • KVs / NVs அங்கீகரிக்கப்பட்ட அரசு பள்ளிக்கூடங்கள் / இந்தியாவில் உள்ள CBSE இணைக்கப்பெற்ற தனியார் பள்ளிக்கூடங்களிலிருந்து மட்டும் பதினொன்றாம் வகுப்புகளில் படிக்கும் அனைத்து பெண் மாணவர்களும் விண்ணப்பிப்பதற்கு தகுதியுடையவர்களாவார்கள்.
  • பதினொன்றாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் (PCM) பிரிவில் சேர்ந்துள்ள பெண் மாணவர்கள்.
  • பத்தாம் பகுப்பில் ஒட்டுமொத்தம் குறைந்தபட்சம் 70 சதவிகித மதிப்பெண் மற்றும் அறிவியல் மற்றும் கணிதத்தில் 80 சதவிகித மதிப்பெண்கள், CGPA பின்பற்றக்கூடிய மற்றும் கணிதத்தில் 9 GPA.
  • ஆண்டு குடும்ப வருமானம் ஓராண்டிற்கு 6 லட்சத்திற்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்.
  • மாணவர்கள் தேர்வு தகுதி அடிப்படையில் இருக்கும்.

மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in