இத்திட்டம் எதற்கு?

  • இந்த திட்டம் வருவதற்கு முன்பு இந்தியாவில் 40%-க்கும் மேற்பட்டவர்கள் வங்கி கணக்கு இல்லாதவர்களாக இருந்தனர்.
  • ஒரு குடிமகன் நிதி ஆற்றல் பெறுவதற்கு வங்கி சேமிப்பு கணக்கு வைத்திருத்தல் என்பது அடிப்படை உரிமை ஆகும்.
  • குடிமக்கள் நிதி ஆற்றல் பெறுதல் என்பது, அரசாங்கத்திடமிருந்து நேரடியாக அனைத்து நன்மைகளையும் பெறுவதற்கு குடிமக்களுக்கு உதவும் (கடன்கள் & இதர சலுகைகள் உட்பட). இதனால் அனைத்து இடைத்தரகர்களின் ஊழல்கள் தவிர்க்கப்படும்.

இத்திட்டத்தின் பலன்கள்:

  • ஏழை மக்கள் வளர்ச்சியடைவதற்கு & அவர்களின் நிதிநிலைமை சீரடைவதற்கு உதவும்;
  • வைப்புத் தொகைக்கு உரிய வட்டி
  • ரூ.1.00 லட்சம் விபத்து காப்பீடு
  • இருப்புத்தொகை வைத்திருக்க தேவையில்லா கணக்கு
  • இந்தியா முழுவதும் எளிதாக பணம் அனுப்பலாம்
  • அரசாங்க திட்டங்களில் பயன்பெறுபவர்கள், இந்த கணக்குகளில் நேரடியாக பயன் மாற்றம் செய்யப் பெறுவார்கள்
  • ஓய்வூதியம், காப்பீடு திட்டங்களை பெறும் வசதி
  • ஒரு வீட்டுக்கு ஒரு கணக்கிற்கு மட்டும், முன்னுரிமையாக வீட்டு இல்லத்தரசிக்கு ரூ.5000/- வரை வங்கி இருப்புக்கு மேல் அதிகப்பணம் (மிகைப்பற்று) எடுக்கும் வசதி
  • 2017 மார்ச்-ல் உள்ளபடி இந்தியா முழுவதிலுமிருந்து இந்த திட்டத்திலிருந்து மொத்தம் 28+ கோடி ஏழை மக்கள் பயனடைந்துள்ளனர் (தமிழ்நாட்டில் 88.66 லட்சம்)

இத்திட்டத்தில் எப்படி சேர்வது :

  1. ஆதார் அட்டை / ஆதார் எண் இருக்குமானால், வேறு ஆவணங்கள் எதுவும் தேவை இல்லை. முகவரி மாறியிருக்குமானால், நடப்பு முகவரி குறித்த ஒரு சுய உறுதிச்சான்றிதழ் போதுமானதாகும்
  2. ஆதார் அட்டை இல்லையெனில், பின்வரும் அதிகாரபூர்வ செல்லத்தக்க ஆவணங்களில் (OVD) ஏதாவது ஒன்று தேவைப்படும்

வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பேன் கார்டு, பாஸ்போர்ட் & NREGA அட்டை. இந்த ஆவணங்களில் உங்கள் முகவரி அடங்கியிருக்குமானால், இது அடையாள மற்றும் முகவரிக்கு ஆதாரமாக கருதப்படும்.

உரியவாறு உறுதிச்சான்றளிக்கப்பட்ட நபரின் நிழற்படத்துடன் அரசிதழ் பதிவுபெற்ற ஒரு அதிகாரியால் வழங்கப்பட்ட கடிதம்.

நீங்கள் அணுக வேண்டிய வங்கிகளின் பட்டியல் :

அனைத்து பொதுத்துறை வங்கிகள் & தனியார் துறை வங்கிகள்

மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in