இத்திட்டம் எதற்கு?

 • இந்திய மக்கள் தொகையில் 58% பேருக்கு வேளாண்மை என்பது முதன்மை வாழ்வாதாரம் ஆகும் மற்றும் 85% விவசாய நிலம் 2 ஹெக்டேருக்கும் குறைவானவை
 • 2015ல், இந்தியா முழுவதிலும் 207 வறட்சி மாவட்டங்கள் மற்றும் 300 ஒழுங்குமுறையற்ற மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் பயிர் பயிரீட்டில் பெரும் பொருளாதார இழப்புகளால் பாதிக்கப்பட்டனர்
 • விவசாயிகளின் வாழ்க்கை தொழிலை மேம்படுத்துதல் மற்றும் அவர்களுடைய பயிர் முதலீட்டை பாதுகாத்தல்
 • இயற்கை சீற்றங்கள், பூச்சிகள் மற்றும் நோய்களின் விளைவால் காப்பீடு செய்யப்பட்ட பயிர் எதுவும் தோல்வியுறும் நேர்வில் முழு காப்பீடு காப்பு மற்றும் நிதியுதவி வழங்குதல்
 • புதுமையான மற்றும் அதிநவீன வேளாண் நடைமுறைகளை பின்பற்றுவதற்கு விவசாயிகளை ஊக்குவித்தல்
 • வேளாண் துறைக்கு கடன் கிடைப்பதை உறுதிசெய்தல் மற்றும் விவசாயிகளுக்கு காப்பீடு கட்டண தவணைத்தொகை சுமையை குறைத்தல்.

இத்திட்டத்தின் பலன்கள்:

 • பின்வருவன போன்ற இடர்களுக்கு காப்பீடு செய்யப்படுகிறது
 • உணவுப் பயிர்கள் (தானியங்கள், சிறுதானியங்கள் & பயறு (வகைகள்), எண்ணெய் வித்துகள் மற்றும் ஆண்டு வணிக / ஆண்டு தோட்டக்கலைப் பயிர்கள்) போன்ற அனைத்து வகை பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு கிடைக்கப் பெறுவர்
 • காப்பீடு கட்டணம், காப்பீடு செய்யப்பட்ட தொகையில் கரீஃப் பருவ பயிர்களுக்கு 2% ரபி பருவ பயிர்களுக்கு5% மற்றும் வணிக பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 5% என்பதாக மட்டுமே இருக்கும்.
 • எடுத்துக்காட்டு : நெல் பயிரீடு செய்யும் 2 ஏக்கர் நிலத்திற்கு 1 லட்சம் காப்பீடு செய்யப்படுகிறது என்றால், அதற்கு காப்பீடு கட்டணம் வெறும் ரூ 2000 என்று மட்டுமே இருக்கும்.
 • இந்த திட்டம், 17,600 கோடி பட்ஜெட் கொண்டு விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கி பாதுகாக்கிறது. 2017 பட்ஜெட்டில் ரூ 9,000 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
 • இந்த திட்டத்திற்கு, அனைத்து விவசாயிகளும் (கடன் இருந்தாலும் அல்லது இல்லையென்றாலும்) தகுதியுடையவர்கள் ஆவார்கள்
 • இந்த ஒட்டுமொத்த காப்பீடு திட்ட நடைமுறை நடவடிக்கையும், மோசடி இல்லாமல், பயனுகந்த திட்டமாக இருக்கச் செய்வதற்கு விவசாயிகள் சேர்க்கையில் தொடங்கி காப்பீடுத் தொகை கொடுக்கச் செய்வது வரை மின்னணுரீதியாகச் செய்யப்படும்.
 • பின்வருவன போன்ற இடர்களுக்கு காப்பீடு செய்யப்படுகிறது
  • விளைச்சல் இழப்புகள்
  • விதை விதைப்பிலிருந்து தடுக்கப்படுவது
  • அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் / சேதங்கள்
  • உள்ளூர் அளவிலான பேரிடர் பாதிப்புகள்
  • பூச்சிகள், நோய்கள்

இத்திட்டத்தில் சேர்வது எப்படி? :

 • சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் விவசாயிகள் இக்காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் இதில் சேர்வதற்காக வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களை அணுகலாம்.

மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in