இத்திட்டம் எதற்கு?

 • ஒவ்வொரு விவசாயியின் நிலத்திற்கும் நீர் கிடைக்கப்பெற வேண்டும் மற்றும் ஒவ்வொரு துளி நீருக்கும் அதிக விளைச்சல் பெற வேண்டும்
 • இந்தியாவிடம் 142 மில்லியன் ஹெக்டேர் பயிரிடக்கூடிய விவசாய நிலம் உள்ளது. 45% விவசாய நிலத்திற்கு மட்டுமே செயற்கை முறையில் பாசன வசதி கிடைக்கிறது மற்றும் எஞ்சிய 55% நிலம் இயற்கையை சார்ந்திருக்கிறது
 • 6 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலத்திற்கு செயற்கை பாசன வசதியை இது வழங்கும்
 • 5 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலத்திற்கு சொட்டுநீர் பாசனத்தை இது வழங்கும்
 • முழுமையடையாத 1,300 நீர்க்கொள்ளும் நீர்ப்பரப்பு திட்டங்களை செய்து முடித்தல்
 • விவசாயப்பண்ணைகளில் நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் நீர் வீணாக்குதலை குறைத்தல்
 • பாசன திட்டங்களுக்கான முதலீட்டை நேரடியாக கள அளவில் செய்தல் மற்றும் நீர் சேமிப்பிற்கு அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்

 

இத்திட்டத்தின் பலன்கள்:

 • புதிய நீர் ஆதாரங்களை உருவாக்குதல், செயலிழந்த நீர் ஆதாரங்களை சீர் செய்தல், மறுசீரமைப்பு செய்தல் மற்றும் புதுப்பித்தல்.
 • கிராம அளவில் நீர் சேகரிப்பு கட்டமைப்புகள், இடைநிலை & குறு அளவிலான நீர் சேமிப்பிடங்களை கட்டுமானம் செய்தல், நிலத்தடிநீர் மேம்படுத்துதல், மரபுசார்ந்த நீர்நிலைகளின் திறன்களை அதிகரிக்கச் செய்தல்.
 • அனைத்து நிலங்களுக்கும் பாசன வசதி செய்வதால், வேளாண் உற்பத்தியை அது மேம்படுத்தும்; உணவுப் பொருட்களின் விலைகளை கட்டுப்பாட்டில் வைக்கும்.
 • விவசாயிகள் அதிக வேளாண் விளைபெறுவதற்கும் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்கும் உதவும்.
 • இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 5 ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி 50,000 கோடி ஆகும். முதலாவது ஆண்டுக்கு மட்டும் 5300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
 • தேசிய வேளாண் சந்தை – விவசாயிகள் தங்களுடைய வேளாண் விளைபொருளை விற்பனை செய்வதற்கு சந்தைகளுக்கு எளிதாக அணுக்கம் பெறுவதற்கு தொழில்நுட்பம் சார்ந்த வசதி.

இத்திட்டத்தில் எப்படி சேர்வது? :

 • இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாநில அரசு பொறுப்புடையதாகும். விவசாயிகள் பாசன நல திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்புடைய வழிகாட்டல் துறையாக மாநில வேளாண்துறை இருக்கும்.

மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in