இத்திட்டம் எதற்கு?

  • பணிதொடர்பான உடல்நலக்குறைபாடு, பேறுகாலம், உடல் உறுப்பிழப்பு மற்றும் இறப்பு போன்றவைகளிலிருந்து ஒருங்கமைக்கப்பட்ட தொழில்துறையைச் சேர்ந்த ‘பணியாளர்களை’ பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதொரு முழுமையான மருத்துவ பராமரிப்பு திட்டம்
  • காப்பீடு பெற்ற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான மருத்துவ பராமரிப்பு

இத்திட்டத்தின் பலன்கள்:

  • செயல்பட இயலாக காலகட்டம் முதல், ஆரோக்கியம் மீட்சியடைந்து மீண்டும் பணியாற்றும் காலகட்டம் வரையிலான முழுமையான மருத்துவ பராமரிப்பு
  • உடல்நலக் குறைபாடு, பேறுகாலம் மற்றும் வேலை தொடர்பான காயங்கள் காரணமாக, பணிக்கு செல்ல முடியாத காலகட்டத்திற்கான சம்பள இழப்பினை ஈடு செய்யும் வகையில் வழங்கப்படும் நிதியியல் உதவி
  • குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவப் பராமரிப்பு காப்புறுதி வழங்கப்படும்

இத்திட்டத்தில் எப்படி சேர்வது? :

  • தொழிலகங்கள், சாலை போக்குவரத்து, ஹோட்டல்கள், உணவகங்கள், சனிமாக்கள், செய்தித்தாள்கள், கடைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் (10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பணியாற்றுமிடம்)
  • பணியாளரின் வருடாந்திர வருவாய் ரூ.15000 ஆக இரக்க வேண்டும் (பணியாளரின் பங்களிப்பு 1.75 சதவிகிதம் மற்றும் பணியமர்த்துனரின் பங்களிப்பு 4.75 சதவிகிதம்)
  • பணியமர்த்துனர் விபரங்களை ESIC போர்டலில் www.esic.in பதிவு செய்ய வேண்டும் (17 இலக்க குறியிடு, பதிவிற்குப் பிறகு வழங்கப்படும்)
  • சட்டப்பிரிவு 2A உடன், வரைவு 10-B – ன் படி, ஒவ்வொரு பணியமர்த்துனரும் இதன் கீழ் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in