இத்திட்டம் எதற்கு?

  • முதியோர் (60 வயதிற்கு மேற்பட்டோர்) பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் அவர்களுக்கு சிறப்பு மருத்துவ பராமரிப்புகள் பொதுவாக கிடைப்பதில்லை.

இத்திட்டத்தின் பலன்கள்:

  • மாநில சுகாதார வழங்கல் அமைப்பின் வழியாக, மூத்தோரூக்கான இலவச, சிறப்பு, ஆரோக்கிய பராமரிப்பு வசதிகள் பிரத்தியேகமாக வழங்கப்படும்
  • கோயம்புத்தூர், தேனி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் இதற்காக துவக்கத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன
  • கம்யூனிட்டி ஹெல்த் சென்டர்களில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும்
  • ஆரோக்கிய பராமரிப்பு பணியாளர்கள் வழியாக, மூத்தோர்களின் வீடுகளுக்குச் சென்று சிகிச்சையளித்தல்

இத்திட்டத்தில் எப்படி சேர்வது? :

  • இச்சேவைகள் மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைகளின் வழியாக வழங்கப்படும்.

மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in