ஏன் இந்த திட்டம்?

 • குடிமக்களுக்கான அரசு சேவைகள் பெருமளவில் சம்பந்தப்பட்ட நபரே நேரடியாக சென்று கைப்பட பெறக்கூடியவையாக உள்ளன, இதனால் ஓய்வூதியம், சான்றிதழ்கள், அரசு அதிகாரிகளுடன் இணைப்புநிலை முதலியவற்றை பெறுவதற்கு பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்
 • ஒவ்வொரு குடிமகனுக்கும் பயன்படும் வகையில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு
 • கோரிக்கையின் பேரில் ஆளுகை & சேவைகள்
 • குடிமக்களை டிஜிட்டல் உரிமைத்திறன் பெறச் செய்தல்

திட்டப்பணிகள் & பலன்கள்:

 • திட்டங்களுக்காக 1,00,000 கோடி & புதிய முனைப்புத்திட்டங்களுக்காக 13,000 கோடி
 • அகன்ற அலைவரிசை இணைப்புவசதி: 2,50,000 கிராமங்களுக்கு (32,000 கோடி ரூபாய்) அகன்ற அலைவரிசை இணைப்புநிலை
 • தொலைபேசிகளுக்கு அனைத்து மக்களுக்கும் அணுகுவசதி: இவ்வசதிபெறாமல் எஞ்சியுள்ள 42,300 கிராமங்களுக்கு வசதி வழங்கப்படும் (16,000 கோடி)
 • பொது இன்டர்நெட் அணுகுவசதி திட்டம்: ரூ 4750 கோடி மதிப்பீட்டில் 1,30,000 கிராமங்கள் பயனடையும் (மொத்தம் உள்ள 2,50,000 கிராமங்களில்). அஞ்சல் அலுவலகங்கள் பன்முக சேவை மையங்களாக ஆக மாற்றம் செய்யப்படும் (1,50,000 அஞ்சல் அலுவலகங்கள்)
 • மின்ஆளுமை: டிஜிட்டல் சான்றிதழ்கள் (பள்ளிச் சான்றிதழ்கள் போன்றவை), அனைத்துத் தகவல்களுக்கான மின்னணு தரவுத்தளங்கள், ஆன்லைன் பொது குறைதீர்ப்பு உள்ளிட்ட அரசுக்கு அனுப்பும் அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைனில் கிடைக்கச் செய்யப்படும்.
 • கிராந்தி: மின்னணுவழியில் சேவைகளை வழங்கல். மின்னணுவழி கல்வி, மின்னணுவழி சுகாதாரப் பராமரிப்பு, விவசாயிகளுக்கான தொழில்நுட்பம், பாதுகாப்புக்கான தொழில்நுட்பம், நீதிக்கான தொழில்நுட்பம் முதலியன.
 • அனைவருக்கும் தகவல்: ஆன்லைன் தகவல்கள் & ஆவணங்கள், குடிமக்கள் மற்றும் அரசுக்கு இடையே இருவழி தகவல்தொடர்பு மற்றும் ஆன்லைன் ஊடாக செய்தி அனுப்புதல்.
 • மின்னணுவியல் உற்பத்தி: 2020ம் ஆண்டுக்குள் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை இறக்குமதி செய்வதை இல்லாமல் ஆக்குதல்
 • வேலைவாய்ப்புகளை உருவாக்கும் IT: சிறிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள மக்களுக்கு (1 கோடி மாணவர்களுக்கு) பயிற்சியளித்தல், தலா ஒரு வடகிழக்கு மாநிலத்திற்கு BPO அமைத்தல், ஊரக தொழிலாளர்கள் தமது சொந்த தேவைகளை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு பயிற்சியளித்தல் (5,00,000 கிராமங்கள்)
 • முன்கூட்டிய அறுவடை திட்டங்கள்: செய்திகளுக்கான ஐடி (IT) மேடை, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் Wi-Fi, பொது Wi-Fi ஹாட்ஸ்பாட்கள், பள்ளி புத்தகங்களை மின் புத்தகங்களாக்குதல், எஸ்எம்எஸ் அடிப்படையிலான வானிலை தகவல்கள் மற்றும் பேரிடர் விழிப்பூட்டல்கள், காணாமல் போன மற்றும் கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய அளவிலான இணையத்தளம்
 • “BHIM” (பீம்) செயலி: விரல் நுனிகளில் டிஜிட்டல் பணம் செலுத்தல் வசதி. சாமானிய குடிமக்களுக்கும் மற்றும் சிறு வர்த்தகர்களுக்கும் ஆதாயமளிக்கும் இது, ரொக்கமின்றி பணம் செலுத்த அவர்களை ஏதுவாக்குகின்றது.

மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in