ஏன் இந்த திட்டம்?

  • நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி கூறினார் ‘சுதந்திரத்தை விட சுற்றுப்புறத்தூய்மை மிகவும் முக்கியமானது’
  • ஊரக குடும்பங்கள் / வீடுகளில் 30% மட்டுமே கழிப்பறை வசதிகளைக் கொண்டுள்ளன.
  • சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதே 2019ம் ஆண்டில் கொண்டாடப்பட உள்ள மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவுக்கான நமது மனமார்ந்த காணிக்கையாகும்.
  • தூய்மையான இந்தியா நமது தேசத்தின் பெருமையையும் பொருளாதாரத்தையும் உயர்த்தும்

குறிக்கோள் & சாதனைகள்:

  • தனிநபர், தொகுப்பு மற்றும் சமுதாய கழிப்பறைகளை கட்டுதல்.
  • திறந்தவெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் தவிர்த்தல் அல்லது குறைத்தல். திறந்தவெளியில் மலம் கழித்தல், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் இறப்புகளுக்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாக உள்ளது.
  • திறந்தவெளியில் மலம் கழித்தலில் உள்ள கேடுகள் பற்றியும், கழிப்பறைகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் பொது விழிப்புணர்வை உருவாக்குதல்.
  • முறையான சுற்றுப்புறத்தூய்மை பயன்பாடு பற்றிய மக்களின் மனநிலையை மாற்றுதல்.
  • கிராமங்களை சுத்தமாக வைத்திருத்தல்.
  • கிராம பஞ்சாயத்துகள் மூலமாக திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மையை உறுதிசெய்தல்.
  • 2019ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கலை உறுதிசெய்யும் வகையில் அனைத்து கிராமங்களிலும் தண்ணீர் குழாய்களை அமைத்தல்.
  • இந்த திட்டப்பணிக்கானச் செலவு ரூ 2 இலட்சங்கள் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில், இந்தியாவின் சுகாதார வீச்செல்லை 42 சதவிகிதத்திலிருந்து 62 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 3.6 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 3 மாநிலங்கள் மற்றும் 119 மாவட்டங்களிலுள்ள 1.75 இலட்சம் கிராமங்களில், திறந்தவெளி மலம் கழிப்பு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு ஆதரவளிப்பது எப்படி?

  • தயவுசெய்து திறந்தவெளியில் எந்தவொரு கழிவுப் பொருட்களையும் எறியாதீர்கள்.
  • சுத்தமான மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் பற்றி பயிற்றுவிக்கவும் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கவும்.
  • நீங்கள் வசிக்கிற உங்கள் தெருவை சுத்தப்படுத்தவும். உங்கள் தெரு – உங்கள் பொறுப்பு.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் 104 வயதான குவார் பாய் என்ற பெண்மணி, ஒரு கழிப்பறையை கட்டுவதற்காக தனது ஆடுகளை விற்றுள்ளார். நாட்டின் மேம்பாட்டுக்காக அந்தப் பெண்மணியின் அற்புதமான பங்களிப்புக்காக அப்பெண்மணிக்கு நாம் தலைவணங்கி மரியாதை செய்வோம்

நாம் எல்லோருமே கல்வியறிவுள்ளவர்கள்நாம் பங்களிக்கிறோமா?.. உங்கள் பங்களிப்பு.. உங்கள் பங்கேற்பு.

 

மேலதிக தகவலைப்பெற, தொடர்புகொள்க: coordinator@pmwelfareschemetn.in